அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற தமிழ் சிங்கள பாடநெறிகளில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர்களது இன நல்லுறவுக்கான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் மட்/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அரசரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.எம்.செய்னுதீன் மற்றும் பி.எம்.பிரியதர்ஷினி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடம்பெறும் 150 மணித்தியால சிங்கள பாடநெறியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தபால் அலுவலக உத்தியோகத்தர்களும் மன்னம்பிட்டி ஆசிரியர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற 150 மணித்தியால தமிழ் பாடநெறியில் கலந்துகொண்ட ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது சிங்கள சிங்கள பாடநெறியினை தொடரும் உத்தியோகத்தர்களினால் தமிழ் பாடநெறியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் வரவேற்கப்பட்டதோடு, தமிழ் பாடநெறியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களது கலை நிகழ்ச்சிகளும் அவர்களுக்கான சான்றுகள் வழங்கும் நிகழும் இடம் பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக பொலன்னறுவை மாவட்ட மொழிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவனி பிட்டிகல, மட்டக்களப்பு மத்திய வலயக் கல்வி பணிமனையின் கணித பாட ஆசிரிய ஆலோசகரான ஆர்.ஜுனைதீன், அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.ஐ.பாரூக் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.