இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் 2 - 0 என இலங்கை அணி நேற்று (19) வெற்றியீட்டியுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக நேற்று (19) இடம்பெற்ற மூன்றாவது மற்றும் இறுதி போட்டி முடிவுகள் இன்றி நிறைவுபெற்றமையினால் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் இலங்கை அணிக்கு இச்சுற்றுப் போட்டியை வெற்றி கொள்ள முடிந்தது.
போட்டி முழுவதும் 217 ஓட்டங்களை சேகரித்த குசல் மெண்டிஸ் ஆட்டத்தின் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
இச் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன், இவ்வருடத்தில் வெற்றி கொண்ட ஐந்தாவது சுற்றுப் போட்டி இது என்பது விசேட அம்சமாகும்.