தென் மாகாணத்தின் கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்கு மறுமலர்ச்சி இலக்கிய கலை பெருவிழா அண்மையில் மாத்தறை கோட்டை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
புதிய கலாச்சார மனிதர்களை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இலக்கிய பெருவிழா வியாபாரக் கூடங்கள், குறுஞ் திரைப்படம், கார்டூன் சித்திர கண்காட்சி, இசை மற்றும் நடனம் போன்ற பவ நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதேச மாகாநாயக்க தேரர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தென் மாகாணத்தின் ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே, தென் மாகாண அமைச்சின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உட்பட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


