பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு
"பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2025 ஜனவரி 23 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, "பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், 2025.03.15 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையிலான அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கௌரவ பிரதி அமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க, அஜித் பி. பெரேரா மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.