ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினம் திருத்தப்பட்ட மையினால் 2025 மே 25 மற்றும் 26 ஆம் திகதி இரண்டு நாட்களும் பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) 2025 ஜூன் 07 ஆம் திகதி சனிக்கிழமை வருவதனால், 2025.06.06 மற்றும் 2025.06.09 திங்கட்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடசாலை விடுமுறை தினத்திற்காக 2025.05.26 திங்கட்கிழமை மற்றும 2025.05.27 செவ்வாய்க்கிழமை தினங்களில் பாடசாலை நடைபெற வேண்டும் என்பதுடன், அதன்படி, 2025 பாடசாலை வருடத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2025.05.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.