புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை
  • :

 பாராளுமன்றம் ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும். பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி நாளை முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

 

 

சபாநாயகர் கௌரவ வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக (5 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஆறு கட்டளைகள், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன. இதற்கு அமைய மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குமார வெல்கம, கௌரவ எச்.நந்தசேன மற்றும் கௌரவ டியூடர் குணசேகர ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகளுக்காக அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]