ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதம சட்ட உத்தியோகத்தராக பணியாற்றிய போது,
சுகாதார அமைச்சிற்கு “மெடி ஹவுஸ் என்ற கட்டிடத்திற்கான குத்தகை உரிமையைப் பெற்றுக் கொள்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தை நிறைவேற்றியமை, குத்தகை ஒப்பந்தக் காலத்தை நீட்டிப்பதற்காக 3 குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்ததாகவும், அந்த ஒப்பந்தங்களைத் தயாரிப்பதற்கான கட்டணமாக ரூபா 4,134,887/- ஐக் கோரியதாகவும், அதில் இருந்து ரூபா 2,000,000/- ஐப் பெற்றதாகவும், மீதமுள்ள தொகையைக் கோரியதுடன் "QIDIO ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் மக்கள் வங்கியில் உள்ள கணக்கிலிருந்து வழங்கப்பட்ட ரூபா. 500.000 மதிப்புள்ள காசோலையைப் பெற்று பணமாக்கியமையின் அடிப்படையில், இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக் கொண்ட குற்றச் சாட்டுக்களின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் சந்தேக நபர் 21.04.2026 அன்று பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.



