2016.01.01 ஆந் திகதிக்குப் பின்னர் அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதிய உரித்தினை வழங்குவது தொடர்பில் நியமனக் கடிதத்தினை திருத்தம் செய்தல்.

  • :
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 2016.01.01 ஆந் தினத்திற்கு அல்லது அதன் பின்னர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் வெளியிடப்பட்ட நியமனக் கடிதங்களில் ஓய்வூதியம் தொடர்பான பிரிவு பின்வருமாறு திருத்தம் செய்வதற்காக இலக்கம் 4®பி/26/0061/816/002 மற்றும் 2026.01.19 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 "இந் நியமனம் ஓய்வூதியம் உரித்துடையதாகும். மேலும், நீங்கள் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் / தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தல் வேண்டும். அரசினால் காலத்துக்குக் காலம் எடுக்கும் தீர்மானத்தின்படி உங்களால் பங்களிப்புப்பணம் செலுத்தப்பட வேண்டும்."

02. அதன் பிரகாரம், மேற்படி ஏற்பாடுகள். 2016.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் வழங்கப்படும் நியமனக் கடிதங்களுக்கு பிரயோகிக்கப்படும்.
03. அத்தோடு, எதிர்காலத்தில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களிலும் ஓய்வூதியம் தொடர்பாக மேற்படி பிரிவு குறிப்பிடப்படல் வேண்டும் என்பதுடன், அது அரசினால் அக்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு உட்படும்.

Related Articles