தற்போது நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான 2025/26 நிலக்கரி பருவம் தொடர்பாக பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை பல ஊடகங்களில் வெளியிடப்படுவது அவதானிப்பட்டுள்ளது.
அது தொடர்பான சரியான தகவலை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இலங்கை நிலக்கரி கம்பெனி இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போதைய இருப்பு மற்றும் திட்டங்கள் நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்திற்காக 2025 செப்டம்பர் மாதம் இறுதி வரை தற்போது காணப்படும் அவசியமான நிலக்கரி போதுமானதாகும்.
தற்போது விநியோக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் நிலக்கரி 840,000 மெட்ரிக் தொன் நிலக்கரி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்கால கொள்முதல் வரவிருக்கும் ஆண்டிற்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
மழை மற்றும் விநியோக காலம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நிலக்கரி விநியோகம் பொதுவாக செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே இருக்கும்.
எனவே, தற்போது வரவிருக்கும் நிலக்கரி பருவத்திற்கான நிலக்கரி விநியோகம் குறித்து எந்த ஆபத்தும் இல்லை.
- இலங்கை நிலக்கரி கம்பனி


