2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு அமைவாக பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சகல நிகழ்வுகள் மற்றும் திட்டங்களை விரைவாக முடிவுறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணிலகே அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அரையாண்டு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றதுடன், அங்கு அமைச்சர் இப்பணிப்புரையை வழங்கியதுடன், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் இதன்போது கலந்துகொண்டார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு


