2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தாண்டியுள்ளது

2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தாண்டியுள்ளது
  • :

18.08.2025 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத, குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்காக பங்களித்த, சுற்றுலாத் துறையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக அவர் தனது X பதிவில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம், 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும், இவர்களுள் முறையே இந்திய, பிரித்தானியா, இரஷ்யா, ஜேர்மன் மற்றும் சீன நாட்டினர் முன்னணியில் உள்ளனர் என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related Articles