மொரட்டுவையில் உள்ள இலங்கை ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 650 பயிலுனர்களைக் கொண்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு விழா நேற்று (23) தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தலைமையில் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இங்கு, மூன்று, மூன்றரை மற்றும் நான்கு வருட கால எல்லையைக் கொண்ட 10 கற்கை நெறிகளைத் தொடரவும், கற்கை நெறியின் இறுதியில், தொழிற்பயிற்சி பரீட்சைகளுக்கு முகங் கொடுக்கவும் வேண்டும். பின்னர், அவர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் சான்றிதழும், அதே போல் NVQ 05 தேசிய டிப்ளோமா சான்றிதழும், தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையால் வழங்கப்படும் தொழிற்பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும்.
இங்கு, தொழிற்பயிற்சி பெறுபவர்களின் மொழி அறிவை மேம்படுத்துவதற்காக விசேட வசதிகளுடன் கூடிய மொழி மையத்தையும் பிரதிஅமைச்சர் இதன்போது கையளித்தார்.