2024ஆம் ஆண்டில் 311,000 ஆக இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் 2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 12வீதத்தால் அதிகரித்து 340,000 இலங்கையர்களை இவ்வருடத்தில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிதாக அனுமதிப் பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று (23) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒழுங்கு விதிகளுடன் சரியாக தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்றும், பணியகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்தும் பணியகத்தின் பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அவ்வாறே வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுமதிப்பத்திரம் பெற்று சில முகவர் நிறுவனங்கள் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தனக்கு தகவல் கிடைப்பதுடன் அவ்வாறான நபர்களுக்கு எதிராக எவ்வித தரங்களையும் பார்க்காது தண்டனை வழங்குவதாகவும், பணத்திற்கு அன்றி மனிதாபிமானத்துக்கு முதலிடம் வழங்கிய ஒரு அமைப்பாக தொடர்ந்து செயற்படுவதாகவும் இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையில் முன்னேற்றத்தைப் பெறுவதற்காக பாரிய செல்வாக்குச் செலுத்தி உள்ளதாகவும் தலைவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.
புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு சந்தையில் சந்தர்ப்பங்களை தேடும் போது வெளிநாட்டு வேலை வாய்ப்புத் துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய தலைவர், அவர்களின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக பணியகம் பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது பணியகத்தின் செயற்பாடு தொடர்பாக, பணியகத்தின் ஊடாக வழங்கப்பட்ட அனுமதி, வழங்கப்படும் பயிற்சி மற்றும் பணியகத்தின் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக தொழில் பெறுநர்கள் அறிந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்வில் நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் இருந்து தகைமை பெற்ற புதிய தொழில் பிரதிநிதிகள் 30 பேர் கலந்து கொண்டனர்.