இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் காட்டியுள்ளதுடன், மொத்த வருமானமாக 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் ஈட்டியுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர்/தலைமை நிர்வாக அதிகாரி மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7% அதிகமாகும் என்றும் அவர் சுட்டடுக்காட்டினார்.
2025 செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் வணிக ஏற்றுமதி மற்றும் சேவைகள் ஏற்றுமதி இரண்டும் உள்ளடங்களாக மொத்த ஏற்றுமதிகள் 1,469.75 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இது 2024 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 12.33% அதிகரிப்பை காட்டியுள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் நிரூபிக்கிறது


