2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி துறையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணக்கூடியதாகவும், நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது
அத்துடன் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 11554.32 அமெரிக்க டொலர்கள் என்பதுடன், 2004 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 6.61%அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் சபை அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் அளவில் வணிகம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,607.58 அமெரிக்க டொலர்கள் ஆகும். இது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2.57% ஆண்டு வளர்ச்சியாகும்.
இது இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.


