2026 ஆண்டுக்கான புதிய கல்வி சீர்திருத்தத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆரம்ப பாடசாலைகளை மறுசீரமைக்கும் திட்டம்
கொள்கை மற்றும் திட்டப் பிரிவின் 2026 ஆம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகள் 312 புதிய வசதிகளுடன் கூடிய "ஆரம்ப பாடசாலை மறுசீரமைப்பு திட்டம்" தொடர்பான கலந்துரையாடல் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
அதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ, கொள்கை மற்றும் திட்டமிடல் கல்விப் பணிப்பாளர் ஜயனி பிரசங்கிகா, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சேத்திரன் மதிப்பீட்டு மேலதிக செயலாளர் சுஜாதா குலேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.