2026 உலக குடியிருப்பு தின நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

2026 உலக குடியிருப்பு தின நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
  • :

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

வீடமைப்பு மற்றும் வாழ்விட அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள், மாற்றுத் தீர்வுகள் மற்றும் புதிய போக்குகள் தொடர்பாக அனைத்துப் பங்காளர்களின் கவனத்தைத் திருப்புவதற்கும், தேசிய மட்டத்திலான உரையாடலொன்றின் மூலம் அதுதொடர்பாக அனைத்துப் பங்காளர்களையும் தெளிவுபடுத்தல் மற்றும் குறித்த முயற்சிகளின் அனுகூலங்களை துரிதமாக அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டின் உலக குடியிருப்பு தினம் ஒக்டோம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறுவதுடன், அதன் தொனிப்பொருளாக‘Adequate Housing for All’ எனப் பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.

உலக குடியிருப்பு தினத்தை உலகளாவிய ரீதியில் அமுல்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பு வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான முகவராண்மை நிறுவனமாக வீடமைப்பு விடயதான அமைச்சு ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் பங்களிப்புக்களையும் பெற்றுக்கொண்டு இம்முறை உலக குடியிருப்பு தினத்திற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்த 2026 உலக குடியிருப்பு தின நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles