கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தின் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தின் செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
  • :

கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் கையொப்பமிடப்பட்டுள்ள கடன் ஒப்பந்தத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 04 பக்கேஜ்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தின் காலப்பகுதி 2025.01.01 தொடக்கம் 2027.08.31 வரை நீடிப்பதற்கும் 2026.01.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்ட விடயதானத்திற்கு பேராதனை பல்கலைக்ககழக வளாகத்தையும் உள்ளடக்குமாறு துணைவேந்தர் அவர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கமைய சாத்தியவளக் கற்கையின் பெறுபேற்றுக்கமைய இப்பல்கலைக்கழகத்தின் விடயதானத்தையும் உள்ளடக்குவதற்கு இயலுமை உண்டெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்ட விடயதானத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தை உட்சேர்ப்பதற்கும், அதற்கான மதிப்பீட்டுச் செலவான 2,000 மில்லியன் ரூபாய்களில் 800 மில்லியன் ரூபாய்களை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்தொகையாகவும், மற்றும் எஞ்சிய 1,200 மில்லியன் தொகையை உள்நாட்டில் ஏற்பாடு செய்வதற்கும், கருத்திட்டக் காலத்தை 2027.12.31 வரை மேலும் நீடிப்பதற்கும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles