இஸ்ரேலில் விவசாயத் துறையில் சட்டப்பூர்வமாக வேலைக்குச் சென்று மீண்டும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் குழுவிற்கான விமானப் பயணச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது.
79 இளைஞர்களுக்கு இவ்வேலைவாய்ப்புக் கிடைத்ததுள்ளதுடன், அவர்களுக்கு 5 வருடங்கள் 3 மாதங்களுக்கு அங்கு பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கு தமது கோவையினைப் பரீட்சிப்பதற்காக www.slbfe.lk பணியகத்தின் இணையதளத்தில் பணியகம் ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலைப் பெற, பணியகத்தின் இணையதளத்தை “ஆட்சேர்ப்பு” ~இஸ்ரேல்| என்பதைத் தெரிவு செய்து தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய தரவுகளை உள்ளிடுவதன் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.