ரஷ்யாவின் 80வது வெற்றி தின நினைவு விழா திங்கள்கிழமை (மே 5) கொழும்பில் உள்ள ரஷ்ய இல்லத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) போரின் போது மேட்கொள்ளப்பட்ட தியாகங்களை கௌரவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ஊர்வலம், அதைத் தொடர்ந்து ரஷ்ய தூதரகத்தின் குழந்தைகளின் கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு செயலாளரை வரவேற்ற இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். தகரியன், ரஷ்ய தூதரகத்தின் கலாச்சாரக் பிரிவின் தலைவரும் ஆலோசகருமான திருமதி மரியா எல். போபோவா மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களில் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.