சமந்த ரணசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம்

சமந்த ரணசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம்
  • :

சமந்த ரணசிங்க அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இன்றையதினம் (08) பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

 

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த கோசல நுவான் ஜயரத்ன அவர்களின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles