கலந்துரையாடல் நவம் மாவத்தையில் உள்ள சிலோன் சம்பார் கான்ஃபரன்ஸில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதுடன் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விலங்கு இனப்பெருக்க செயல் முறையை முன்னேற்றுதல், உள்நாட்டு பாலின் தரத்தை அதிகரித்தல், உள்நாட்டு பாலை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடாத்துதல், கால்நடை வளத்துறைக்காக இளம் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக தொழில் நுட்பம் போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது விசேடக் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், விலங்குகளின் இனப்பெருக்க செயல்முறையை அதிகரிப்பதே தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் நோக்கமாகும். புதிய இனப்பெருக்க செயற்பாடுகளுக்காகத் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடை வளத்துறையில் எமது விலங்குகளுக்கு உணவு போதுமானதாக இல்லை.
விலங்குகளின் உணவுக்காக புல் மற்றும் சோளம் போன்றவற்றை வளர்ப்பது மிகவும் அவசியமாகும். நாம் அதற்காக செயற்பட்டு வருகின்றோம்.
ஆறு இலட்சம் மெட்ரிக் தொன் சோளம் தற்போது அவசியமாயினும், 3 லட்சம் மெட்ரிக் தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உற்பத்தி நூற்றுக்கு 40 வீதம் மாத்திரம் தான்" என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபையின் தலைவர் உட்பட அரச மற்றும் தனியார் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு


