"அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி - 2025" கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், 2025 அக்டோபர் 10 முதல் 14 வரை ஐந்து நாட்கள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.
38வது தடவையாக நடாத்தப்படும் இந்த விளையாட்டுப் போட்டியில், 31 குழு போட்டிகளையும், தடகளப் போட்டியையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இல்லங்களுக்கிடையேயான விளையாட்டு விழா பிறகு, பிரதேச, வலய மற்றும் மாகாண போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தும் மாணவர்கள் அகில இலங்கை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும்சுமார், பதினைந்தாயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு குழு போட்டிகளில் பங்கேற்கவுள்ளர்கள், மேலும் ஐந்தாயிரம் விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1170 பாடசாலைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவும்வழங்கப்பட உள்ளன.


