அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழக தூதுக் குழுவுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடல்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழக தூதுக் குழுவுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடல்
  • :

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் (Defense Security Cooperation University) பாதுகாப்பு ஆளுமைத்துவ நிறுவகமான (Institute for Security Governance - ISG) பிரதிநிதிகள் தூதுக் குழுவு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (19 மே) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தது.

இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்புத் துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், ‘பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி’ (Training of Trainers) என்ற கருத்தின் மூலோபாய அமலாக்கமும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், வலுவான இராணுவப் பயிற்சியுடன் இணைந்து பாதுகாப்புத் துறையின் சிவில் அதிகாரிகளுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்கால ஒத்துழைப்புகளை மேலும் பயனுள்ளதாக முன்னெடுக்க விரிவான திறனாய்வு மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன என்பதிலும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு மேலதிக செயலாளர், சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles