மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், அம்பாறை மாவட்டச் செயலகம் மற்றும் உஹன பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை - 2025 இன்று (06) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை உஹன பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற உள்ளது.
அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புகள் குறித்த விரிவான அறிவையும் வாய்ப்பையும் இதன் மூலம் பெற முடியும் என்று அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவு