அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.425,000 மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழஙியுள்ளது.
குறித்த பயிர்களை புதிதாக நடுகை செய்வதற்கும் மற்றும் மீள்நடுகைக்கும் தேவையான நாற்றுக்கள், கன்றுகளை ஏற்றுமதி விவசாயத் திணைக்கள வேலைத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு நேற்று (05) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையால் சேதமடைந்துள்ள குறுங்காலப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு உதவி வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை இலக்கம் 08/2025 மற்றும் 08/2025(i) இன் மூலம் வெளியிடப்பட்டுள்ளதன.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள நீண்டகால விவசாயப் பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை இனங்கண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


