நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட Harbour View Residencies வீடமைப்புத் திட்டத்தில் 350 வீட்டு அலகுகளை பொலிஸ் திணைக்களத்திற்கு கொள்வனவு செய்வதற்கும், குறித்த வீட்டு அலகுகளுக்குப் போதியளவு வாகனத் தரிப்பிட வசதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு நேற்று (05) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச மற்றும் பகுதி அரச நிறுவனங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு வீட்டு அலகுகளை வழங்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் சிறில் சீ பெரேரா மாவத்தை, கொழும்பு 13 இல் அமைந்துள்ள 14 மாடிகளுடன் கூடிய 452 வீட்டு அலகுகளைக் கொண்ட Harbour View Residencies வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் போதியளவு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் நோக்கில் குறித்த வீடமைப்புத் திட்டத்தில் 350 வீட்டு அலகுகளை பொலிஸ் திணைக்களத்திற்கு கொள்வனவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


