அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசுக்கு சுமையாக அல்லாமல் நாட்டிற்கு விளைதிறன் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது, அரசாங்கத்தின் தூரநோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடுதல் தொடர்பாக அரசாங்க புதிய அச்சகர் கே. ஜி பிரதீப் புஷ்பகுமார உட்பட அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவு தலைவர்களின் பங்குபற்றலுடன் பொரளையில் அமைந்துள்ள அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் கலந்துரையாடலுடன் அரசாங்க அச்சகத்தின் சகல பிரிவுகளுக்கும் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்ததுடன், அங்கு புதிதாக மற்றும் 3 தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசாங்க அச்சகத்தில் பணி ஆற்றுகின்ற அனுபவமிக்க ஊழியர்களை சந்தித்து, அச்சகத்தின் முன்னேற்றத்திற்காக மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், அவ்வாறே அங்கு காணப்படும் பலவீனங்கள், குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்தும் கண்டறிந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
24 மணித்தியாலங்களும் சேவைகளை தொடராக வழங்கும் அரசாங்க அச்சகத்தின் செயற்பாடுகளை எவ்வித இடையூறுகளும் இன்றி செயற்படுத்துவது முக்கியமானது என வலியுறுத்திய அமைச்சர், நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமை தொடர்பாகவும் கவனத்தில் கொண்டு சிறந்த நிர்வாகம் மற்றும் திட்டத்திற்கு இணங்க சகல தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் அத்திட்டங்களுக்கு இணங்கக் கூடியதாக எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தமது நிறுவனத்தின் பின்னணியை முன்னேற்றுதல் மாத்திரமன்றி ஒட்டு மொத்தமாக சகல நிறுவனங்களினதும் பிரதிபலிப்பை முன்னேற்றுவதற்கு மற்றும் வழங்கப்படும் சேவையை பரவலாக்குவதற்கு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சகல நிறுவனங்களுடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதால் தனியார் நிறுவனங்கள் போன்று இலாப மீட்டக்கூடிய துறைகளுடன் இணைந்ததாக திறந்த சந்தையில் போட்டியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மிகவும் நீண்ட வரலாற்றுடன் அரசாங்கத்தின் அச்சக திணைக்களம் இந்த நாட்டு இளைஞர் சமுதாயத்திற்கு அச்சுத் துறை தொடர்பான அறிவை பகிர்ந்து கொள்வதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என இதன் போது வலியுறுத்திய அமைச்சர், இளைஞர் சமுதாயம் அச்சுத் துறையில் ஊக்குவிக்கக் கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்தார்.
உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மதிப்பீடு, தொழில்நுட்ப ஊழியர்களின் வெற்றிடங்களை பூரணப்படுத்துதல், அரசாங்கத்தின் அச்சகத் துணைக் களத்திற்கு திருத்தப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல், திணைக்களத்திற்கு நவீன தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி செய்வதற்காக சகல துறைகளையும் உள்வாங்கியதாக விரிவான திட்டம் ஒன்றை செயற்படுத்துதல், சகல வெளியீட்டு செயற்பாடுகளையும் யுனிகோட் ஊடாக மேற்கொள்ளுதல், சைபர் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு, "சிறந்த ஊழியர் குழுவினர், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தரமான முழுமையாக சேவை பெறுநர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக அச்சு மற்றும் வெளியீட்டு சேவையை வழங்குதல்" எனும் குறிக்கோளுடன் செயற்படும் அரசாங்க அச்சகத் திணைக்களம் அரச மற்றும் பொது நிறுவனமாக இரகசியமான, உடனடி, அத்தியாவசியமான அச்சு உட்பட அச்சு மற்றும் வெளியீட்டு சேவைகளை வழங்குதல், இணையத்தளம் ஊடாக நேரடியாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் தகவல் தொடர்பாடலை மேற்கொள்ளுதல், அச்சு செயற்பாடுகள் தொடர்பாக தொழிநுட்ப சேவை வழங்குதல் போன்ற பணிகள் இடம்பெற்று வருகின்றன.