அஸ்வசும பயனாளிகளின் ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

அஸ்வசும பயனாளிகளின் ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்
  • :

அஸ்வசுமவின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், 2025 ஜூலை மாத உதவித்தொகை, 2025 ஜூலை 24 ஆம் திகதி (நாளை) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ. 11,296,461,250.00 (பதினொரு பில்லியன் இருநூற்று தொண்ணூற்று ஆறு மில்லியன் நானூற்று அறுபத்து ஓராயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய்) தொகையை 1,424,548 (ஒரு மில்லியன் நானூற்று இருபத்து நான்காயிரத்து ஐநூற்று நாற்பத்தெட்டு) பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

ஜூலை 24 முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து தமக்கு உரித்தான உதவித்தொகையை மீள் எடுக்க முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

Related Articles