ஆட் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்துப் பொதுச் சேவைகளும் நாளை (17.04.2026) செயல்பட மாட்டாது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
ஆட் பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆட் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும், ஒரு நாள் சேவை உட்பட அனைத்துப் பொதுச் சேவைகளும் வெள்ளிக்கிழமை, 17.04.2026 அன்று செயல்படாது என்பதைப் பொதுமக்களுக்கு அறிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு


