சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனின் திடீர் மரணம் குறித்து...

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனின் திடீர் மரணம் குறித்து...
  • :

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கல் ஆணைக்கழுவினால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த திடீர் மரணம், பகுடிவதையின் விளைவாக ஏற்பட்டதாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்தும் அமைச்சு உன்னிப்பாகக் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எதிராக அமைச்சு அதிகபட்ச நடவடிக்கையை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் சமூக ஊடகத் தகவல்கள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். தற்போதைய பொலிஸ் விசாரணைகள் மற்றும் பிற உள்ளக விசாரணைகள் இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வெளிப்படுத்தும் வரை, பல்வேறு நபர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த திடீர் மரணம் குறித்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]