சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது
  • :
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆந் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல் கடந்த மாதம் 30ஆந் திகதி இடம்பெற்றது.
பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித குலத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் மொழி எனும் சிறப்பான ஆயுதம் பயன்படும் விதம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
- இலங்கை பாராளுமன்றம்

Related Articles