இம்முறை அக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துவதாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார் .
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இடம் பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்
எமது நாட்டில் முதியோர்களின் தொகை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அதனால் அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைப்புக்கள் மற்றும் நிறுவனம் என்ற அடிப்படையில் முதியோர்கள் தொடர்பாக விசேடக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற வேலை திட்டத்தில் நாட்டில் உள்ள முதியோர்களுக்கு தரமான ஓய்வூதிய வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அவசியமான பின்னணியை உருவாக்கும் வேலை திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்
நிகழ்வுகளில் முதியோர்களுக்கு தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரத்திற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வது, சங்கங்கள் குழுக்களை நடத்துவதற்கும் அவற்றுக்கு அவசியமான நிதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் குறைந்த வருமானம் வரும் குடும்பங்களில் உள்ள முதியோர்களுக்கு விசேடமாக தொடர்ந்தும் பங்களிப்பை வழங்க முடியாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 50,000 அளவிலானவர்களுக்கு. 3000 ரூபாய் நிதி உதவியை வழங்கியதாகவும் தற்போதைய அரசாங்கம் போதுமான அளவில் இதனை 8 லட்சத்து 50 ஆயிரத்து பத்து லட்சம் வரை அதிகரித்து 3000 ரூபாய் கொடுப்பனவை 5000 ரூபாய் வரை அதிகரித்து நிதி உதவி வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்


