சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது
  • :

சட்டவிரோதமான முறையில், பகுதிகளாக இறக்குமதி செய்து ஒன்று சேர்க்கப்பட்ட ஜீப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

19.07.2025 அன்று, வலானா ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மதுகம பொலிஸ் பிரிவக்குட்பட்ட நேபட பகுதியில் ஒரு இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.

அங்கு சட்டவிரோதமான முறையில், பகுதிகளாக இறக்குமதி செய்து ஒன்று சேர்க்கப்பட்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் லேண்ட் க்ரஷர் வகை ஜீப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டு மதுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர் மதுகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலானா ஊழல் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

- பொலிஸ் ஊடகப் பிரிவு - 

Related Articles