"சயுர" விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஆகஸ்ட் 14 ஆம் திகதி தங்காலையில்

"சயுர" விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஆகஸ்ட் 14 ஆம் திகதி தங்காலையில்
  • :

"சயுர" விபத்து காப்பீட்டுத் திட்டத்தை மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு 2025.08.14 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் பங்கேற்புடன் தங்காலையில் நடைபெறவுள்ளது என்று கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் வளங்களை வழங்கும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் அபாயங்களை நிர்வகிப்பதையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மிகவும் திருப்திகரமான நிலைக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன், கமநல காப்புறுதி சபை "சயுர" என்ற விசேட விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ரூ. 1850/-, ரூ. 2450/- மற்றும் ரூ. 3050/- என்ற வருடாந்த தவனை தொகையின் அடிப்படையில் முறையே ரூ. 1,200,000/-, ரூ. 1,500,000/- மற்றும் ரூ. 2,000,000/- வரையிலான காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச தவனைத் தொகையில் அதிகபட்ச காப்பீட்டை வழங்க கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெிர்பார்த்துள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், மீனவர்களின் உயிரிழப்பு, மொத்த மற்றும் தற்காலிக ஊனம், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறுதிச் சடங்கு செலவுகள், கடலிலும் நிலத்திலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது கடலில் காணாமல் போதல் போன்றவற்றுக்கு இது காப்பீடு அளிக்கிறது.

Related Articles