சில பிரதேசங்களை உள்ளடக்கியதாக நீர் போக்குவரத்து சேவையை கடற்கரையில் அல்லது நாட்டில் காணப்படும் நீர் வழிகளைப் பயன்படுத்தி சில பிரதே சங்களில் உள்ளடக்கியதாக படகு சேவையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இது தொடர்பாக குறிப்பிட்டார்.
அதன்படி புத்தளம்- கோட்டை, கோட்டை - காலி, காலி - மாத்தறை போன்ற பகுதிகளில் சமுத்திர நீர் போக்குவரத்து சேவையை உருவாக்குவதற்காகவும் அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதனால் சுற்றுலாத்துறை முன்னேற்றம் மற்றும் பயணிகள் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை நீர் நிலைகள் மற்றும் நீர் பாய்ச்சல்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு என்பதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவும் நகர பயணிகள் போக்குவரத்திற்காகவும் நீர் நிலைகள் மற்றும் நீர் பாய்ச்சலை வினைத்திறனாகப் பயன்படுத்தக் கூடிய நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹெமில்டன் நீர்வீழ்ச்சி, பேரே வாவி, தியவண்ணா ஓயா, மதுகங்கை போன்ற நீர் நிலைகளை பயன்படுத்தி உள்ளக நீர் போக்குவரத்தை வழங்குவதனால் சுற்றுலா துறையை முன்னேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கும், அதன் பெறுபேறுகளின் படி அரச தனியார் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தினார்.