சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத் தலைவர் சந்தன திசாநாயக்கவின் கருத்தின்படி, பெருந்தோட்ட நிறுவனத்தால் அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட பங்களா, நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து புதிய வருவாய் வழிகளை உருவாக்கும் நோக்கில் சமீபத்தில் ஒரு சுற்றுலா விடுதியாகத் திறக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


