மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நேற்றறு (26) காலி மாவட்டத்தின் மாபலகமவில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,000 மையங்கள் கட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் HEALTHY SRI LANKA - "ஆரோக்கியமான நாட்டிற்காக" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இது, இந்த ஆண்டு 100 ஆரம்ப சுகாதார மையங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு நெருக்கமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார மையங்கள், அடிப்படை சிகிச்சைக்கு மேலதிகமாக நோய் தடுப்புச் சேவைகளையும் வழங்கும்.


