சுற்றுலா வீசாவை பயன்படுத்தி ஓமான் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஓமான் நாட்டில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் ஓமான் அரசாங்கத்தின் பொலிஸ் அறிவித்தல் ஒன்றை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஓமான் நாட்டில் தொழில் செய்ய முடியாது என்றும், அந்த விசாவை உபயோகித்து அதனை தொழில் வாய்ப்பிற்கான வீசாவாக மாற்ற முடியாது என்றும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓமான் அரசாங்கம் சட்ட ரீதியான தொழில் வாய்ப்பை வழங்கும் போது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக (SLBFE) த்தினால் வெளியிடப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்டதான வழிகள் மற்றும் வழிகாட்டல்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் என மஸ்கட்டில் அமைந்துள்ள இலங்கை தூதுவர் அலுவலகம் இலங்கையின் தொழில் தேடுபவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.