Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த ரூ.350 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிலந்த பரணகம தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்திற்கு ரூ.30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது மலசலகூடத் தொகுதியை நவீனமயப்படுத்த ரூ.10 மில்லியன் மற்றும் சீகிரியா ஹோட்டல் சந்திக்கு அருகே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூடத் தொகுதியை நிறுவ ரூ.20 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்பட உள்ளன. இரண்டு திட்டங்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மாவட்ட ஊடகப் பிரிவு - மாத்தளை