சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், அப் பகுதியை உத்தியோகபூர்வ சுற்றுலா வலயமாக வர்த்தமானி மூலம் அறிவித்தல், அந்தப் பகுதிக்கு தொடர்ச்சியான நீர் விநியோகமும் தொடர்ச்சியான மின்சார விநியோகமும் வழங்குதல், முறையான கழிவு முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துதல், புதிய நகரத் திட்டத்தின் அடிப்படையில் அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்தல், சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வீதி வசதிகளை மேம்படுத்தி போக்குவரத்து அமைப்பை சீரமைத்தல், வரி வசூல் செயல்முறையை முறையாக ஒழுங்குபடுத்துதல், சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக பிரதேச சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், சுற்றுலா வணிகத்துடன் தொடர்புடைய ஆலோசனை சேவை நிறுவனங்களின் ஆதரவைப் பெறுதல் ஆகிய விடயங்கள் விசேட கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இவ்வாறான பல முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.


