பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்
  • :
புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்புக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கமைய, 1,170 மில்லியன் யென் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் 'தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச நடைமுறைகளுக்கமைய மேம்படுத்தும் பணிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அதன்கீழ் விமான நிலையத்தின் உள்வருகை முனையத்தில் 04 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளைப் பொருத்தும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், வெகுவிரைவில் பயணிகள் விடுவிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்வருகை முனையத்தில் பொருத்தப்பட்டுள்ள 04 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளுக்குச் சமாந்தரமாக வெளியேறும் முனையத்திலும் 04 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளைப் பொருத்துவதன் மூலம், ஒரே முறைமையின் கீழ் மிகவும் வினைத்திறனாகவும் சரியாகவும் பயணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமை கிட்டும்.
 
அதற்கமைய, 04 தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவுகளைப் பொருத்தும் பணிகளை 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles