சுற்றுலாத் துறையின் மூலம் கிராமப்புற சமூகங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக homestay Tourism ஊக்குவிப்புத் திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் (ceygate Travels (pvt) ltd) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்றது.
சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பங்களிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படக்கூடிய கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு பயிற்சி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சார்பாக பணிப்பாளர் நாயகம் சி.டி. கலுஆராச்சி மற்றும் ceygate Travels (pvt) Ltd சார்பாக நிர்வாக பணிப்பாளர் கே.எஸ்.ஏ.சி. செனரத் ஆரச்சி ஆகியோர் இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


