இலங்கை அஞ்சல் துறையின் ‘எல்ல’ அஞ்சல் நிலையத்தின் சுற்றுலா பயணிகளுக்கான இல்லம் (Tourist House) மற்றும் முத்திரை அலுவலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தபால் துறைக்கு சொந்தமான ‘எல்ல’ தபால் நிலையத்தின் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் (Tourist’s House) மற்றும் முத்திரை அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 151 வது உலக தபால் தின நிகழ்வுடன் இணைந்து நடைபெற்றது.
இந்த இரண்டு திட்டங்களும் தபால் துறைக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களாகும், மேலும் இந்த திட்டங்களின் பிரதான நோக்கம் தபால் துறையின் வருமானத்தை அதிகரிப்பதாகும்.
நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பாக இலங்கை தபால் துறையும் இந்த திட்டங்களை வகுக்க முடியும் முடியும், மேலும் எதிர்காலத்தை வலிமையுடன் எதிர்கொள்ள நேர்மறையான மாற்றம் தேவை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
சுற்றுலாபயணிகளுக்கான இல்ல திறப்பு நிகழ்வு , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கான நினைவு முத்திரைகள் விற்பனை செய்யும் நிகழ்வு மற்றும் சுற்றுலா இல்லத்தின் முதல் முன்பதிவுகளை ஆரம்பித்தல் ஆகியவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திரு. நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் அத்துடன் தபால் மா அதிபர் திரு. ருவன் சத்குமாரவின் பங்கேற்புடன் இங்கு நடைபெற்றன.
2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ‘ எல்ல ’ தபால் நிலையயம் திறக்கப்பட்டது.
அதன் மேல் தளம் தபால் நிலைய தபால் அதிபரின் உத்தியோகபூர்வ தங்குமிடமாக காணப்பட்டது தற்போது ரூ. 4.5 மில்லியன் செலவில் உல்லாச பயணிகளுகக்கான தங்குமிட இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு சுற்றுலா விடுதிக்கு ஏற்றவாறு முழுமையாக புதுப்பித்து, தேவையான தளபாடங்களை வழங்குவதன் மூலமும் 2025 ஆம் ஆண்டில் தபால் நிலையத்திற்கு வருவாய் ஈட்டும் இடமாக இதை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
தற்போது எல்ல என்பது சுற்றலா பயணிகளை கவர்ந்து ஒரு சுற்றுலா தளமாகும்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, துணை தபால் மா அதிபர் (செயல்பாடுகள்) பிரேமச்சந்திர ஹேரத், துணை தபால் மா அதிபர் (மேம்பாடு) துசித ஹுலங்கமுவ, துணை தபால் மா அதிபர் (நிர்வாகம்) சமீஷா டி சில்வா மற்றும் இலங்கை தபால் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


