இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக் கண்காட்சி

இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக் கண்காட்சி
  • :

இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இன்று (22) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரை நிதியறிவுக் கண்காட்சி இடம்பெறுகின்றது.

குறித்த கண்காட்சியில் வங்கிச் சேவைகள். கொழும்பு பங்கு பரிவர்த்தனை – முதலீட்டு வழிகாட்டல்கள், ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள், ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைகள், கொடுகடன் தகவல் பணியகத்தினுடைய சேவைகள் உள்ளிட்டவையும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள், தொழில் முயற்சியாளர் சந்தை, நாணய அரும்பொருட் காட்சியகம் என்பனவும் இடம்பெறவுள்ளன.

குறித்த கண்காட்சியில் அனைத்து வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றமையினால் நிதிசார் தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் தங்களுடைய தேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிதிசார் சிக்கல்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இருக்கின்றவர்கள் தங்கள் சந்தேகங்களை ஒரே இடத்தில் தீர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைக்கின்றது.

ஆகவே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

Related Articles