வர்த்தகம், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் விசா வசதிகள் குறித்து பூட்டானும் இலங்கைக்கும் இடையே பேச்சுவார்த்தை

வர்த்தகம், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் விசா வசதிகள் குறித்து பூட்டானும் இலங்கைக்கும் இடையே பேச்சுவார்த்தை
  • :

வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பூட்டானின் தொழில், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் Namgyal Dorji இடையேயான சந்திப்பு அண்மையில் (20) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது.

 

வர்த்தகம், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான விசா வசதிகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு நலன்களை உள்ளடக்கியதாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்

 

Related Articles