இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய தலைவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் போது வலியுறுத்தினார்.
இலங்கை போக்குவரத்துச் சபை என்பது அளப்பறிய பொதுச் சேவையொன்றை வழங்கும் நிறுவனமாகும், தற்போது இந்த நிறுவனத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், அதை மீண்டும் எழுச்சி பெறச் செய்ய முடியாத நிறுவனம் அல்ல என்று இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க வலியுறுத்துகிறார்.
நேற்று (06) இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் துறைப் பொறுப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்னிலையில் தனது பதவியில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்த தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை போக்குவரத்து சபை ஒருபோதும் விற்கப்பட மாட்டாது என்றும், இது தனது அமைச்சின் மிகப்பெரிய நிறுவனம் என்றும், சுமார் 27,000 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க ஊழியர்களின் ஆதரவு அவசியம் என்றும் கூறினார்.