தபால் சேவை மேலும் திறைசேரிக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை
- சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை தபால் திணைக்களத்தின் அஞ்சல் உதவியாலர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்காக நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (06) பிற்பகல் அலறி மாளிகையில் இடம் பெற்றது.
2021 ம் ஆண்டின் பின்னர் தபால் திணைக்களத்திற்கு நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை என்பதுடன் அதனால் கடந்த வருட இறுதியில் தபால் திணைக்களத்தில் 1982 அஞ்சல் உதவியாளர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டது.
அந்த வெற்றிடங்களின் எண்ணிக்கையுடன் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சிக்கலான நிலை தோன்றியதுடன் அதற்கு தீர்வாக 1000 சம்பந்தப்பட்ட வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கோரிக்கைக்கு அமைவாக 2025 ஆகஸ்ட் 19 ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதன்படி இதுவரை தபால் திணைக்களத்தில் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்யப்பட்டு, உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ளவர்களில் 731 பேர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் 269 அஞ்சல் உதவியளர்கள் எதிர்காலத்தில் உள்வாங்கப்படுவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இந்த அஞ்சல் உதவியாளர்கள் ஆரம்ப திறன் அல்லாத சேவை தொகுதியின் தரம் III க்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சு


