ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட நிலைபெறுதகு பொருளாதார அபிவிருத்திக்கு தேசிய முன்னுரிமையாக தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டத்தைத் தயாரிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
அதற்கமைய, இலங்கை முதலீட்டு அபிவிருத்திச் சபையால் ஏற்றுமதித் துறைசார் அரச மற்றும் தனியார் துறையின் பங்காளர்களுடன் இணைந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் 2026 2030 தயாரிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் வர்த்தகப் பண்டங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு செலாவணியை ஈட்டுவதற்கான இலக்குடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் செயன்முறையை மேற்கொள்ளுதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய திட்டங்கள் மூலோபாய பணிச்சட்டங்களாக அமையும்.
அதற்கமைய, 'இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் 2026 2030 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்கு உத்தியோகபூர்வ மூலோபாய பணிச்சட்டகமாக அங்கீகரிப்பதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


