இலங்கை வனவிலங்கு வரலாற்றில் முதல் தடவையாக வனவிலங்கு துறை அதிகாரிகளுக்காக பதக்கம் வழங்கும் நிகழ்வு (21) நாளை சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் கிரிதலை தேசிய வனவிலங்கு ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
30 வனவிலங்கு துறை அதிகாரிகளால் மற்றும் வனவிலங்கு துறை தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிபுணத்துவத்தின் மதிப்பீடுகளுக்கு அமைவாக தங்கம், வெள்ளி வெண்கலப் பதக்கங்களை அணிவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, துறை சார்ந்த நிபுணத்துவம், தத்துவார்த்த பயிற்சி, துறை சார்ந்த வினைத்திறன், ஒழுக்கம், விசேட செயல்பாடுகளுக்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான பதக்கம் வழங்கும் செயற்பாடு வனவிலங்கு திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.
வனவிலங்கு அதிகாரிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்து வந்த வனவிலங்கு வளங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் உற்சாகத்தையும் அர்ப்பணிப்பையும் மேம்படுத்துவதற்காக இந்தப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.


